முகப்பு
செய்திகள்

ஓடிடியில் வாழ - 2 எப்போது?

வாழ - 2 படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Updated On : 21 ஏப்ரல் 2026, 4:34 pm IST
வாழ - 2 படத்தின் போஸ்டர். - படம்: இன்ஸ்டா / விபின் தாஸ்.
பகிர்:

வாழ - 2 படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

மலையாளத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற படம் வாழ. இப்படத்தை ஆனந்த் மேனன் இயக்கியிருந்தார். குறைவான பட்ஜெட்டில் ஹிட் படமாக அமைந்தது.

தொடர்ந்து, தற்போது இயக்குநர் விபின் தாஸ் எழுத்தில் சவின் எஸ். ஏ இயக்கத்தில் வாழ - 2 ஏப். 2-ல் வெளியானது. பள்ளிகால கதையாக உருவான இது பலரிடமும் நகைச்சுவை, நெகிழ்ச்சிப் படமாக அமைந்ததால் இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது. வசூலாகவும் ரூ. 110 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

Advertisement

Advertisement

இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழிவினர் அறிவித்திருந்தனர். முதல் இரண்டு பாகங்களும் ஆண்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தது. மூன்றாம் பாகம் பெண்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படவுள்ளது. இதனை, விபின் தாஸ் எழுத சவின் எஸ்ஏ இயக்குகிறார்.

இந்த நிலையில், வாழ - 2 திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

summary

Information has emerged regarding the OTT release of the film Vaazha - 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.