ஓடிடியில் கருப்பு எப்போது?
கருப்பு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....
கருப்பு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ’பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க, ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இதுவரை இப்படம் உலளவில் ரூ. 250 கோடி வசூலைக் கடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தப் படம் வெளியாகி 12-வது நாளிலும் 900 திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக இயக்குநர் ஆர்ஜே பாலாஜி அண்மையில் தெரிவித்திருந்தார்.
கருப்பு படத்தில் யோகி பாபு, யூடியூப் பிரபலங்களான சதீஷ், தீபா, வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த காட்சிகள் திரையரங்குகளில் வெளியானபோது, இடம்பெறவில்லை.
இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளுடன் சேர்த்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Information regarding the OTT release of the film Karuppu has emerged.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.