வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!
இரண்டு வானம் முதல் பாடல்...
நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் அவரை வைத்தே இயக்கிய ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.
தற்போது, மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ள திரைப்படத்திற்கு, ‘இரண்டு உலகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கொடைக்கானலில் 150 நாள்களுக்கும் மேலாக நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்திருந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான வெள்ளிச்சுடரே பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைப்பில் மதராஸே எழுதிய இப்பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார். பாடல் முழுவதும் தமிழ் வரிகள் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.
The first song from actor Vishnu Vishal's film Rendu Vaanam has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.