பெரிய முன்வெளியீட்டு வணிகத்தைச் செய்த கட்டா குஸ்தி - 2!
கட்டா குஸ்தி - 2 திரைப்படம் குறித்து...
நடிகர் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி - 2 திரைப்படம் பெரிய முன்வெளியீட்டு வணிகத்தைச் செய்துள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் கடந்த 2022-இல் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நடிகர் விஷ்ணு விஷாலே தயாரித்த இந்தப் படத்தை சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கியிருந்தார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் தயாரிக்கும் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. கட்டா குஸ்தி - 2 திரைப்படம் வருகிற ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய நடிகர் விஷ்ணு விஷால், “என் திரைப்படங்களிலேயே வெளியீட்டிற்கு முன்பாகவே அதிக தொகைக்கு வணிகமான திரைப்படம் இதுதான். வலுக்கட்டாயமாக இப்பாகத்தை எடுக்கவில்லை. இது வெற்றி பெற்றால், ராட்சசன் - 2, நேற்று இன்று நாளை - 2, முண்டாசுபட்டி - 2 ஆகிய படங்களுக்கான வாய்ப்புகள் திறக்கும். கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தைப் பார்த்த பலரும் பாராட்டுயுள்ளனர். தனித்துவமான படமாகவே இது இருக்கும். முதல் பாகத்தில் இடைவேளைக் காட்சி பேசப்பட்டது போல், இரண்டாம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சி பேசப்படும். பல புதிய கதாபாத்திரங்களைக் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Vishnu Vishal's Gatta Kusthi 2 has generated significant pre-release business.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.