பில்லா மறுவெளியீட்டு டிரைலர்!
பில்லா டிரைலர்...
பில்லா திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் விஷ்னு வர்தன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. தொடர்ந்து, அஜித் பில்லா - 2 படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இப்படம் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனம் பில்லா திரைப்படத்தைத் மறுவெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது, மே 1 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், மறுவெளியீட்டுக்கான டிரைலரை வெளியிட்டுள்ளனர்.
The re-release trailer for the movie Billa has been released.