முகப்பு
செய்திகள்

வா வாத்தியார் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

வா வாத்தியார் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Updated On : 27 ஜனவரி 2026, 11:53 am IST
வா வாத்தியார் போஸ்டர்.
பகிர்:

நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

கடந்தாண்டே வெளியாக வேண்டிய இந்தப் படம், தயாரிப்பாளர் சந்தித்த நிதி வழக்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பொங்கல் வெளியீடாக கடந்த ஜன. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வா வாத்தியார் வெளியானது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் கார்த்திக் உடன் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், வா வாத்தியார் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை(ஜன. 28) தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் இந்தத் திரைப்படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், ஓடிடியில் கவனம் பெறுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

summary

The OTT release date of actor Karthi's film 'Va Vaathiyar' has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.