லீடர் ஓடிடி தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
லீடர் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...
நடிகர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான லீடர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்திருந்த லெஜண்ட் திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து, எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் கூட்டணியில் லெஜண்ட் சரவணன் லீடர் படத்தின் நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் யூடியூபிலேயே 2 கோடி பார்வைகளைக் கடந்தது.
முழு ஆக்சன் திரைப்படமாக உருவான லீடர் திரைப்படம், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், லீடர் திரைப்படம் வரும் மே 29 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The OTT release date for the film *Leader*, starring actor Legend Saravanan, has been officially announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.