நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் உருவான பெத்லகேம் குடும்ப யூனிட் படம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
நாயகனுக்கும் 10 வயது குறைவான நாயகிக்கும் இடையேயான காதல் கதையை மையமாகக் கொண்டு, ஓணம் திருநாளை முன்னிட்டு வெளியான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
வெளியீட்டுக்குப் பின்பு தமிழ்நாட்டிலும் பெத்லகேம் குடும்ப யூனிட் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்தப் படம் தமிழிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
நடிகர்கள் ஃபகத் ஃபாசில், இயக்குநர் திலீஷ் போத்தன் உள்ளிட்டோரின் தயாரிப்பில் உருவான இந்தப் படம், ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப் படைத்தது.
இந்த நிலையில், பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம், வரும் அக். 2 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் இதற்கு முன்பு அதிக வசூல் செய்த படங்களான லோகா, வாழ 2 படங்களின் வசூலை பெத்லகேம் குடும்ப யூனிட் முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
The OTT release date for Nivin Pauly's film Bethlehem kudumba Unit has been officially announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.