FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்த வார இறுதிவரை விற்றுத்தீரும் டிக்கெட்கள்... மீண்டும் பெரிய வெற்றியை நோக்கி நிவின் பாலி!

பெத்லகேம் குடும்ப யூனிட் வசூல் குறித்து...

பகிர்:

நடிகர்கள் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் அதிக திரைகளில் திரையிடப்பட்டு வருகிறது.

இந்தாண்டு ஓணத்திற்கு நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான கலிஃபா, நிவின் பாலி நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய படங்கள் வெளியாகின.

இதில், பிருத்விராஜின் கலிஃபா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளது. மேலும், நடிகர் நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் நல்ல விமர்சனங்களுடன் கூடிய வரவேற்பையும் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இதனால், பெத்லகேம் குடும்ப ஒரு வாரத்தில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஓணம் பண்டிகை இந்த வாரம் இறுதிவரை இருப்பதால் கேரளத்தில் பல பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை வரை பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்திற்கான டிக்கெட்கள் கிட்டத்தட்ட விற்றுத்தீரும் அளவில் உள்ளன.

தோல்விப்படங்களால் நீண்ட காலம் துவண்டிருந்த நிவின் பாலிக்கு சர்வம் மாயா திரைப்படம் ரூ. 150 கோடி வரை வசூலித்து வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது. தற்போது, பெத்லேகம் குடும்ப யூனிட் திரைப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது.

The film Premalu, starring Nivin Pauly and Mamitha Baiju, is being screened on a large number of screens.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments