முதல் நாளைவிட 9ஆவது நாளில் அதிக வசூல்: ரூ.170 கோடியைத் தாண்டிய பெத்லகேம் குடும்ப யூனிட்!
நிவின் பாலி - மமிதா பைஜூ நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் வசூல் வளர்ச்சி குறித்து...
நிவின் பாலி - மமிதா பைஜூ நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் வசூல் வளர்ச்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரீஷ் ஏடி இயக்கத்தில் உருவான இந்தப் படம் முதல் நாளைவிட ஒன்பதாவது நாளில் அதிகமாக வசூலித்து, இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.173 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.
திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த ஆக.21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் மமிதா, நிவின் பாலி உடன் சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
முதல் நாளில் இந்தப் படம் ரூ.16.20 கோடி வசூலிக்க, ஒன்பதாவது நாளில் ரூ.24.25 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. உலக அளவில் ரூ.173 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.
இந்தப் படம் ரூ.23 கோடி பட்ஜெட்டில் உருவாகி அதனை விட பல மடங்கு லாபம் ஈட்டியுள்ளது படக்குழுவையும் சினிமா ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Higher collections on Day 9 than on Day 1: 'Bethlehem Kudumba Unit crosses Rs 170 crore!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.