சமந்தாவின் எங்கள் தங்கம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ்!
நடிகை சமந்தாவின் எங்கள் தங்கம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் குறித்து...
நடிகை சமந்தாவின் ’எங்கள் தங்கம்’ (தெலுங்கில் ’மா இன்டி பங்காரம்’) என்ற திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா தனது புதிய திருமணத்துக்குப் பிறகு முதல்முறையாக வெளியாகவிருக்கும் திரைப்படமாக ’எங்கள் தங்கம்’ படமாக இருக்கிறது. அவரது கணவர் இந்தப் படத்துக்கு கதை எழுதியுள்ளார்.
ஓ பேபி படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி மற்றும் நடிகை சமந்தா கூட்டணியில் தெலுங்கு மொழியில் உருவான ’மா இன்டி பங்காரம்’ தமிழில் ’எங்கள் தங்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படம் மே 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், வரும் ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறதென் அறிவிக்கப்பட்டுள்ளது.