ஓம்லி குறும்பட விருது விழா: முதல் பரிசு வென்ற மட்டஞ்சேரி மாஃபியா!
ஓம்லி குறும்பட விருது விழாவில் மட்டஞ்சேரி மாஃபியா எனும் குறும்படம் முதல் பரிசு வென்றுள்ளது.
ஓம்லி குறும்பட விருது விழாவில் மட்டஞ்சேரி மாஃபியா எனும் குறும்படம் முதல் பரிசு வென்றுள்ளது. அந்த குறும்படத்தை இயக்கிய இயக்குநர் அன்சல் முஹம்மதிற்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.
ஓம்லி என்டர்டைன்மென்ட் (Omly Entertainment) சார்பில் பிரம்மாண்டமான ஓம்லி ஷார்ட் ஃபிலிம் கான்டெஸ்ட் (Omly Short Film Contest) மற்றும் விருது வழங்கும் விழா சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில், ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ஓம்லி குறும்பட விழாவில் புதிய மற்றும் திறமையான குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் படைப்புகள் திரையிடப்பட்டு, அவர்களுக்கு முறையான அங்கீகாரமும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் மற்றும் இயக்குநர்கள் இந்த விருது விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வாழ்த்தினர்.
முதலிடம் வென்ற 'மட்டஞ்சேரி மாஃபியா (Mattancherry Mafiya) திரைப்படத்தின் குழுவிற்கும், இயக்குநர் அன்சல் முஹம்மதிற்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.
சிறந்த நடுவர் விருது பிரிவில் இரண்டாம் இடம் வென்ற 'வி ஹேர்ட் தி வேர்ல்ட் லுக்ஸ் பியூட்டிஃபுல்' (We Heard The World Looks Beautiful) திரைப்படத்தின் சிறந்த குழுவிற்கும், இயக்குநர் ஸ்ரேயாஸ் மாந்தரேவிற்கும் 50,000 ரூபாய் பரிசளிக்கப்பட்டது.
மூன்றாம் பரிசு உறவுகள் சிறுகதை திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த குறும்படத்தை இயக்கிய இயக்குநர் பி.பி. சந்தீப்பிற்கு ரூ.25,000 அளிக்கப்பட்டது.
அற்புதமான கதைக்களம், அசாத்திய சினிமாத்தனம் மற்றும் தனித்துவமான படைப்பாற்றலுக்கு கிடைத்த மிகச் சரியான அங்கீகாரம்.
குறும்படங்களை உருவாக்குவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், திரையுலகில் சாதிக்க நினைப்பவர்களுக்கும் இது போன்ற விழாக்கள் ஒரு சிறந்த ஊக்கமாக அமைவதாக பரிசு வென்ற குறும்பட இயக்குநர்கள் தெரிவித்தனர்.
Omli Short Film Awards Ceremony: Mattancherry Mafia Wins First Prize!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.