முகப்பு
செய்திகள்

ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லமே தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

செல்லமே தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக...

Updated On : 30 ஜூன் 2026, 2:29 pm IST
செல்லமே செல்லமே தொடர் - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லமே தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சின்ன திரையில் பூவே பூச்சூடவா, அபி டெய்லர், நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிழக்கு வாசல் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா முரளிதரன்.

தற்போது, இவர் செல்லமே செல்லமே தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடிகர் ரேஷ்மா முரளிதரன் உடன் சுந்தரி தொடர் பிரபலம் ஜிஷ்ணு மேனன் இணைந்து நடிக்கிறார்.

Advertisement

Advertisement

சன் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர், பிரிந்த கனவன் மற்றும் மனைவிக்கு இடையே சிக்கி தவிக்கும் குழந்தைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

செல்லமே செல்லமே தொடர் - படம்: இன்ஸ்டாகிராம்

மேலும், இந்தத் தொடரில் அனுராதா, ராமச்சந்திரன் மகாலிங்கம், சர்வேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், செல்லமே செல்லமே தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

செல்லமே செல்லமே தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.

summary

Filming for Reshma Muralidharan's serial Chellame Chellame has concluded.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments