முகப்பு
செய்திகள்

அறிமுக நாயகனாக அசத்திய கென்! யூத் வசூல் இவ்வளவா?

யூத் திரைப்படம் குறித்து...

Updated On : 21 மார்ச் 2026, 3:57 pm IST
பகிர்:

நடிகர் கென் நடிப்பில் வெளியான யூத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் கென், இயக்கி நடித்த திரைப்படம் யூத். பள்ளி மாணவனான நாயகன் காதலிப்பதையே நோக்கமாக வைத்திருப்பதும் பின் பெற்றோர் வலிகளைப் புரிந்துகொண்டு படிப்பில் கவனம் செலுத்தும் கதையாக உருவான இப்படம் கடந்த மார்ச். 19 ஆம் தேதி வெளியானது.

படத்தின் வெளியீட்டிற்கு முன்பே டீசர், டிரைலர், முட்ட கலக்கி ஆகிய பாடல்கள் பெரிதாகக் கவனிக்கப்பட்டதால் இயல்பாகவே எதிர்பார்ப்பு எழுந்தது.

Advertisement

Advertisement

வெளியீட்டிலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கைகொடுத்ததால் வெற்றிப்படமாகவுள்ளது.

மேலும், இரண்டு நாள் வசூலாக இப்படம் ரூ. 6 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

பிரதீப் ரங்கநாதனைத் தொடர்ந்து தானே இயக்கி, நடித்த படம் மூலம் நாயகனாகவும் இயக்குநராகவும் கென் வெற்றி பெற்றுள்ளார்.

summary

actor ken's youth movie gets good response in theatres

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments