விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகள்... நிறைவடைந்த காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர்!
காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் நிறைவடைந்தது தொடர்பாக...
காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் 176 நாள்களில் குறுகிய காலத்தில் நிறைவடைந்துள்ளது.
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இந்தத் தொடரில் விளம்பரப் படங்களில் நடித்து புகழ் பெற்ற அனில் செளத்ரி நாயகனாகவும் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்துப் புகழ் பெற்ற பாப்ரி கோஷ் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பான கனா தொடரில் நடித்து கவனம் பெற்ற டோனிஷா ஆகியோர் நாயகிகளாகவும் நடித்து வந்தனர்.
Advertisement
Advertisement
நடிகர் விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் பாணியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வந்தது.
நடிகை ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா தயாரித்துவரும் இந்தத் தொடர், கடந்த சனிக்கிழமை விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகளுடன் நிறைவடைந்தது.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் தொடர், 8 மாதங்களில் 176 நாள்களில் நிறைவடைந்துள்ளது.
அதேபோல, கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ருத்ரா தொடரும் 146 நாள்களில் நிறைவடைந்தது.
இந்த நிலையில், இரு தொடர்களும் நிறைவடைந்ததால் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் பிரியமானவள் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
The series of Kathu Vaakula Rendu Kadhal has been completed in a short span of 176 days.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.