விரைவில் நிறைவடைகிறது கெளரி தொடர்!
கெளரி தொடர் நிறைவடையவுள்ளது குறித்து...
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெளரி தொடர் விரைவில் நிறைவடைகிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் முன்னணி தொடர்களில் ஒன்றான கெளரி சீரியலில், கெளரியாக சம்யுக்தாவும், அசோக் பாத்திரத்தில் நரேஷ் ஈஸ்வரும் நடித்து வருகின்றனர்.
துர்கா என்ற கிராமத்து பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளை, தெய்வசக்தி எப்படிக் காப்பாற்றுகிறது என்பதை மையப்படுத்தி இந்தத் தொடரின் கதை எடுக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
பத்மாவதி திரைக்கதை எழுத, பரமேஷ்வர் இத்தொடரை இயக்குகிறார். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடரை, இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம் நடிகை சுஜிதா, கருமாரி அம்மனாக சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்தத் தொடரில் அண்மையில், ரோஜா தொடர் நாயகி பிரியங்கா நல்காரி இணைந்தார்.
விறுவிறுப்புடனும் ஸ்வாரசியம் குறையாமல் எடுக்கப்படும் கெளரி தொடர், விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. இந்தத் தொடரின் கிளைமேக்ஸ் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
The serial 'Gowri', currently airing on Kalaignar TV, is set to conclude soon.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.