பரபரப்பான இறுதிக்கட்டம்.... கெளரி தொடர் 775 நாள்களுடன் நிறைவு!
கெளரி தொடர் 775 நாள்களுடன் நிறைவடைந்தது குறித்து...
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கெளரி தொடர் 775 நாள்களுடன் நிறைவடைந்தது.
கெளரி தொடரின் பிரதான பாத்திரங்களில் சம்யுக்தாவும், நரேஷ் ஈஸ்வரும் நடித்து வந்தனர். பத்மாவதி திரைக்கதை எழுத, பரமேஷ்வர் இத்தொடரை இயக்கி வந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம் நடிகை சுஜிதா, கருமாரி அம்மனாக சிறப்புத் தோற்றத்தில் நடித்து வந்தார். ரோஜா தொடர் நாயகி பிரியங்கா நல்காரியும் இணைந்து நடித்து வந்தார்.
Advertisement
Advertisement
துர்கா என்ற கிராமத்து பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளை, தெய்வசக்தி எப்படிக் காப்பாற்றுகிறது என்பதை மையப்படுத்தி இந்தத் தொடரின் கதை எடுக்கப்பட்டு வந்தது.
2024 ஜனவரி மாதம் முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த கெளரி தொடர், பரபரப்பான இறுதிக்கட்டக் காட்சிகளுடன் ஜூலை 25-ல் நிறைவடைந்தது.
விறுவிறுப்புடனும் ஸ்வாரசியம் குறையாமலும் எடுக்கப்பட்டு வந்த கெளரி தொடர் நிறைவடைந்தது, இந்தத் தொடரை விரும்பிப் பார்த்து வந்த ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The serial Gowri, which aired on Kalaignar TV, concluded after a run of 775 days.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.