இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!
வினோதினி தொடர் நிறைவடையவுள்ளது தொடர்பாக...
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வினோதினி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது.
சமூகத்தில் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் காரணிகளை எதிர்கொண்டு பொருளாதார சுதந்திரம் பெற வினோதினி எவ்வாறு போராடுகிறாள் என்பதை மையப்படுத்தி இத்தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் பணிபுரியும் வினோதினியின் கணவர் விபத்தில் காணாமல்போன நிலையில், கணவரின் குடும்பத்தை கவனித்துக் கொண்டு, வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது
Advertisement
Advertisement
திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில், கார்த்திகை தீபம் தொடர் பிரபலம் நடிகை ஆர்த்திகா பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்,
மேலும் இந்தத் தொடரில் கிருஷ்ணா, சல்மா, அப்சர், அரவிந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
வினோதினி தொடரின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில். இந்தத் தொடரின் பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகளுடன் வரும் ஆக. 8 ஆம் தேதி முடிவடையவுள்ளது.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த வினோதினி தொடர், குறுகிய காலத்தில் நிறையவடையவுள்ளது, இந்தத் தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
The serial Vinodhini, currently airing on Sun TV, is set to conclude this weekend.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.