ராம் சரணின் பெத்தி பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
நடிகர் ராம் சரணின் பெத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...
நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் ஏப். 30 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், இப்படத்தை ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றியமைத்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ராம் சரண் (41 வயது) தற்போது பெத்தி எனும் பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தினை புஜ்ஜி பாபு சனா இயக்குகிறார்.
உள்ளூரில் விளையாட்டு கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்திற்காக தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்து வருகிறார்.
ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான சிக்கிரி பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.
ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Actor Ram Charan peddi release date out
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.