முகப்பு
செய்திகள்

அனிஷ்மா, ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகும் ’மொத ராத்திரி’ திரைப்படம்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் தமிழில் உருவாகும் மூன்றாவது படம் குறித்து...

அனிஷ்மா, ரிஷிகாந்த். - படங்கள்: இன்ஸ்டா / அனிஷ்மா, ரிஷிகாந்த்.
பகிர்:

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் தமிழில் உருவாகும் மூன்றாவது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ’மொத ராத்திரி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்குகிறார்.

தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் 2015 முதல் படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார்கள்.

தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் படங்களை தயாரித்து வருகிறார்கள். தமிழில் குட் பேட் அக்லி, டியூட் ஆகிய படங்களை தயாரித்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது படத்தை அறிவித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் ’மொத ராத்திரி’ எனும் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகுமெனக் கூறியுள்ளது.

மலையாள நடிகை அனிஷ்மா தமிழில் சிறை, யூத் படங்களின் மூலமாக கவனம் பெற்றுள்ளார். ரிஷி காந்த் இந்தியன் 2, கூலி, இரும்புத் திரை போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தக் கூட்டணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

summary

Anishma, Rishikanth starring Modha Rathir Mythri Tamil 03 announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments