புதிய அத்தியாயத்தின் தொடக்கம்! விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து!
தவெக தலைவர் விஜய்க்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக 108 இடங்களில் தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ளது. ஆளும் திமுக அரசின் கூட்டணி 73 இடங்களைப் பிடித்து ஆட்சியை இழந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக முக்கியத் தலைவர்கள் பலரும் தோல்வியடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
தவெக தலைவர் விஜய்க்கு திரை நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்தி வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவில், “அனைவரும் உங்களை நேசிப்பதால் மட்டுமல்ல பல வெறுப்புகளாலும் இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள்.
அனைத்து கூச்சல்களுக்கும் வெறுப்புகளுக்கும் மத்தியிலும், உங்கள் இருப்பை நீங்கள் நிலைநிறுத்தி காட்டியுள்ளீர்கள். இவை உங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் மீதான நேசத்தால் கிடைத்தவை.
நான் முன்பே சொன்னது போல், நீங்கள் அனைவரின் உணர்வாக இருக்கிறீர்கள். இந்த வெற்றி அதற்கு ஒரு சான்றாகவும், ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவும் உள்ளது.
ஜோசப் விஜய் சார். இது உங்களின் கடினமாக உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி. தளபதி, நீங்கள் இதற்கு முழு தகுதியுடையவர்!” என்று பதிவிட்டுள்ளார்.
Keerthy Suresh Wishes Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.