சூர்யாவுடன் த்ரிஷா! கருப்பு புதிய போஸ்டர் வெளியீடு!
கருப்பு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
கருப்பு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’கருப்பு’.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியே இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
Advertisement
Advertisement
முன்னதாக, படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
கருப்பு திரைப்படம் மே 14 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பரபரப்பானதால் பட வெளியீடு தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் படம் மே 14 அன்று சொன்ன தேதியில் வெளியாகும் என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சூர்யா - த்ரிஷா ஜோடியின் புதிய போஸ்டரை கருப்பு படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது.
Trisha with Suriya! New 'Karuppu' Poster Released!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.