இன்று முதல் ஒளிபரப்பாகும் துளசி தொடர்!
துளசி தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்து...
புதிய தொடரான துளசி சீரியல், இன்று(மே 11) முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடரில் ஸ்ராவ்னிதா ஸ்ரீகாந்த், சம்யுதா, அருண் குமார் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். துளசி தொடரின் முன்னோட்டக் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், நடிகர் விஜய், நடிகைகள் ரம்பா, தேவையானி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நினைத்தேன் வந்தாய் படத்தின் கதையைப்போலவே துளசி தொடர் எடுக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்தத் தொடர் இன்று முதல் பகல் 12.30 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மணமகளே வா, புனிதா தொடர்கள் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் புதிய தொடரான துளசி, இன்று முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நிமேஷிகா ராதாகிருஷ்ணன், சுரேந்தர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வந்த புனிதா தொடர், 469 எபிசோடுகளுடன் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது.
அதேபோல, நடிகை ஹரிகா சாது பிரதான பாத்திரத்தில் நடித்து வந்த, மணமகளே வா தொடர் 543 எபிசோடுகளுடன் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது.
The new series Thulasi is set to air on Sun TV starting today (May 11).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.