முகப்பு
செய்திகள்

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் வெளியீட்டுத் தேதி!

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...

சிக்மா படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / ஜேசன் சஞ்சய்.
பகிர்:

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் திரைப்படமான சிக்மா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக சிக்மா படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.

Advertisement

Advertisement

மேலும் இந்தப் படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Vijay son Jason sanjay SIGMA storms into theatres on July

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.