பரிமளா அண்ட் கோ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
பரிமளா அண்ட் கோ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு பற்றி...
பரிமளா அண்ட் கோ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பசங்க திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ், வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம் என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
கடைசியாக இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ. 100 கோடி வசூலித்து அசத்தியது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, பரிமளா அண்ட் கோ படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில், ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக மே 28 அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்திருந்த நிலையில் கருப்பு திரைப்படத்தின் வெற்றி காரணமாக பரிமளா அண்ட் கோ படம் ஜூன் 5 அன்று வெளியாகவுள்ளது.
Parimala and Co. – Release Date Announcement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.