`ஜெயிலர் 2' படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
`ஜெயிலர் 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி பற்றி....
`ஜெயிலர் 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முதல் பாகத்தின் தோற்றத்திலேயே நடிக்கிறார். மேலும் படத்தில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.
சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத்தே அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Advertisement
Advertisement
வெளியீடு தேதி நெருங்கி வரும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து ரசிர்களை படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியல் ஆழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் டிரைலர் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
"The film crew has announced the trailer release date of 'Jailer 2' today."
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.