முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! இன்று 6 மாவட்டங்களில் மழை! நாளை (அக். 4) 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்

விமானத்தில் சூப்பர் ஸ்டாரை சந்தித்த சுப்ரீம் ஸ்டார்!

பெங்களூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் - சரத்குமார் பயணம் செய்தது பற்றி....

Sarathkumar meets Rajinikanth on flight

ரஜினிகாந்த் - சரத்குமார்.

Published On :

பெங்களூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து நடிகர் சரத்குமார் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சரக்குமார் தனது எக்ஸ் தளத்தில், பெங்களூருவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரஜினிகாந்தை எதிர்பாராத விதமாக சந்தித்தது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. மைசூரில் நடைபெறும் எங்களது படப்பிடிப்பு பணிகள் மற்றும் பணிச்சூழல் குறித்து இருவரும் பரிமாறிக்கொண்டோம்.

சென்னை வந்ததும் ரசிகர்கள் மற்றும் அபிமானிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். நாங்கள் இன்று இருக்கும் நிலைக்கு காரணமான ரசிகர்களுடன் இந்த தருணத்தை பகிர்ந்துகொண்டது மறக்க முடியாத அனுபவமாகவும், மகிழ்ச்சியான தருணமாகவும் அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்மன். அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இரண்டுகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மைசூரில் தற்போது நடைபெற்று வருகிறது.

Summary

Actor R. Sarathkumar has shared his happiness about unexpectedly meeting superstar Rajinikanth on a flight from Bangalore to Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.