முகப்பு
ஸ்பெஷல்

மாலை நேரக் கல்வி வகுப்புகள் அமைக்க ரசிகர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவு!

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... மாலை நேரக் கல்வி வகுப்புகளை அமைக்க ரசிகர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டதைப் பற்றி...

Updated On : 20 ஜூன் 2026, 6:59 am IST
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் (கோப்புப்படம்) - (கோப்புப்படம்)
பகிர்:

பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரக் கல்வி வகுப்புகளை அமைக்க தனது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பொதுமக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஏழை மாணவர்களுக்கான மாலை நேரக் கல்வி வகுப்புகளை (tuition centres) அமைப்பதாக அவரது ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அந்த அறிக்கையில், “ஏராளமான பள்ளிகளைத் தொடங்கிய முன்னாள் முதல்வர் கே. காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 அன்று, அவருக்கு மரியாதை செலுத்துமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.

பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள்கள் போன்ற கல்வி உதவிகளை வழங்குமாறும்” அவர் வலியுறுத்தினார்.

[2023 ஜூலை 15 ஆம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிலிலிருந்து...]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments