முகப்பு
ஸ்பெஷல்

மழையால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய நடிகர் விஜய்!

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... மழையால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய நடிகர் விஜய்யைப் பற்றி...

Updated On : 19 ஜூன் 2026, 1:00 pm IST
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் அரிசி வழங்கியபோது... - (தினமணி கருவூலத்திலிருந்து...)
பகிர்:

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் இலவச அரிசி வழங்கினார்.

சென்னையில் பெய்த அடை மழையால் குடிசைகளில் வசிக்கும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நடிகர் விஜய் உதவ முன்வந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் இலவசமாக அரிசி வழங்க முடிவு செய்தார். இதற்காக அவர் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு எண்ணூர் வந்தார். அவரைப் பார்ப்பதற்காக பொது மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தார்கள். ரசிகர்கள் பட் டாசுகள் வெடித்து விஜய்யை வரவேற்றனர்.

இலவச அரிசி

கடலோர பகுதி குப்பத்தைச் சேர்ந்தவர்கள் விஜய்க்கு மாலையும், சால்வைகளும் அணிவித்தனர். விஜய் ஆயிரம் பேர்களுக்கு இலவச அரிசி பொட்டலங்களை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், “எண்ணூர் மக்களை நான் சந்திப்பது இரண்டாவது முறை. உதவி செய்வது அடி மனதில் இருந்து வர வேண்டும். சின்ன வயது முதல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பக்குவம் எனக்கு இருந்தது.

Advertisement

Advertisement

யார் என்ன உதவி கேட்டாலும், முடிந்தவரை உடனே செய்து விடுவேன். நடிகரான பின் உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகி விட்டது. இன்று இந்த விஜய் உங்கள் முன்னால் நடிகராக நிற்பதற்கு நீங்கள் தான் காரணம். மக்கள் கஷ்டப்படும்போது, நான் சம்பாதிக்கிற பணத்தில் உதவி செய்கிறேன். அந்தப் பணம் உங்கள் பணம்தான்.

விஜய்யைக் கண்ட உற்சாகத்தில் ரசிகர்கள். - (தினமணி கருவூலத்திலிருந்து...)

எப்படி என்று கேட்கிறீர்களா? நீங்கள் தியேட்டருக்குப் போய் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குகிறீர்கள். அந்தப் பணம் பட விநியோகஸ்தர்களுக்கு போகிறது. விநியோகஸ்தர் தயாரிப்பாளருக்குக் கொடுக்கிறார். தயாரிப்பாளர் எங்களுக்குக் கொடுக்கிறார். அதனால், உங்கள் பணத்தைத் தான் உங்களுக்கு உதவியாக செய்கிறேன்.

இப்போது நான் செய்வது சின்ன உதவிதான். இன்னும் பெரிய உதவிகளை செய்ய ஆசைப்படுகிறேன். அரிசி ஏன் கொடுக்கிறேன் என்றால் கஷ்டப்படுகிறவர்கள் வயிறு நிறையும்போது, அவர்களின் மனசு என்னை வாழ்த்தும். அந்த வாழ்த்துகள்தான் எனக்கு நிறைவைத் தரும்” என்றார் விஜய்.

தமிழ்நாடு முழுவதும் வழங்குகிறார்

சென்னையில் திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, துறைமுகம், தியாகராயநகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய இடங்களுக்கும் காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, கட லூர் ஆகிய இடங்களுக்கும் அவர் நேரில் சென்று அரிசி வழங்கினார்.

டிசம்பர் 1-ந் தேதி முதல் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் என்று தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குகிறார்.

[1998 டிச. 1 ஆம் தேதி வெளியான சினிமா எக்ஸ்பிரஸ் பக்கத்திலிருந்து...]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments