முகப்பு
ஸ்பெஷல்

விஜய் அன்பளிப்பு! ரிக்‌ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... ரிக்‌ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள் வழங்கிய நடிகர் விஜய்யைப் பற்றி...

Updated On : 19 ஜூன் 2026, 9:54 pm IST
உணவு பரிமாறிய விஜய் - கருவூலத்திலிருந்து...
பகிர்:

நடித்துக்கொண்டிருந்த காலத்தில் விஜய் செய்த உதவிகளைப் பற்றி...

சென்ற மாதம் 10 ஆம் தேதி வடபழனி ஜே.எஸ். திருமண மண்டபத்தில் “1000 ரிக்‌ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டும், அறுசுவை உணவும் விஜய் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், “கடந்த ஒரு வார காலமாக, சென்னை நகரெங்கும் பலத்த மழை பெய்தது. இதனால், சென்னை நகரிலுள்ள தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடும் என்பதை எண்ணும்போது மகிழ்ச்சியே; இருப்பினும் இந்த தீராத மழையிலும் ரிக்‌ஷா ஓட்டினால்தான், வீட்டில் அடுப்பெரியும் என்ற சூழ்நிலையிலுள்ள, இந்தத் தொழிலாளர்களை நினைக்கும்போது, உண்மையிலேயே என் மனம் கஷ்டப்பட்டது.

Advertisement

Advertisement

ரிக்‌ஷா தொழிலாளர்களுடன் விஜய். - (2001 டிச. 1 ஆம் தேதி புகைப்படம்) சினிமா எக்ஸ்பிரஸ்

அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும், மழை பெய்தாலும் அவர்கள் சந்தோஷமாக வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த மழைக் கோட்டை வழங்க ஏற்பாடு செய்தேன். இங்கே இருக்கும் ஒவ்வொரு தொழிலாளர்களும் உழைக்கும் வர்க்கம். அவர்கள் மனம் பூ போல் மலர்ந்து சிரித்த முகத்துடன் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்” என்றார் விஜய்.

ரிக்‌ஷா தொழிலாளிக்கு மழைக்கோட் வழங்கிய விஜய். - (2001 டிச. 1 ஆம் தேதி புகைப்படம்) சினிமா எக்ஸ்பிரஸ்

டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது, “நியாயமான, உண்மையான, மனிதாபிமான உதவியாக இருந்தால் விஜய் ஓடிவந்து செய்வார். சென்ற முறை மழையால் பாதிக்கப்பட்ட 500 ரிக்‌ஷா தொழிலாளர்களுக்கு மழை கோட் வழங்கினார். இந்த முறை 1000 பேருக்கு வழங்கியுள்ளார். அடுத்த முறை இன்னும் அதிகமாகும்” என்றார் அவர்.

பிறகு அனைத்து ரிக்‌ஷா தொழிலாளர்களுக்கும் விஜய்யும் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரும், அறுசுவை உணவுகளை பரிமாறினர். அகில இந்திய ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலன், செயலர் ரவிராஜா, துணைத் தலைவர் ராஜேந்திரன், பி.ஆர்.ஓ. பி. செல்வகுமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்தனர்.

[2001 டிச. 1 ஆம் தேதியிட்ட சினிமா எக்ஸ்பிரஸ் இதழின் பக்கத்திலிருந்து...]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments