FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கிளாம்பாக்கத்திலிருந்து தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு இலவச சேவை!

கிளாம்பாக்கத்திலிருந்து தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு இலவச சேவை இயக்கப்படவுள்ளது பற்றி...

28 வினாடிகள் முன்பு
கிளாம்பாக்கத்திலிருந்து தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு இலவச சேவை - Photo: X / Tamilan Parthiban
பகிர்:

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து மறைமலை நகர் மற்றும் சிஎம்டிஏ காலநிலை பூங்கா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு இலவச பேருந்து சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதிக்காக நவ. 5 முதல் நவ. 7 வரை 15,659 அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்,

Advertisement

Advertisement

கிளாம்பாக்கம் சிஎம்டிஏ காலநிலை பூங்கா அருகில் திறந்தவெளி இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்,

மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்,

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்,

மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் கூட்டநெரிசலைக் குறைக்கும் விதமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே சிஎம்டிஏ காலநிலை பூங்கா அருகிலும், மறைமலை நகரிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு தற்காலிக பேருந்து நிலையங்களுக்கும் பயணிகள் செல்வதற்கு வசதியாக கிளாம்பாக்கம் எம்டிசி பேருந்து நிலையத்திலிருந்து இலவச பேருந்து சேவை இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

summary

Diwali - Free bus service from Kilambakkam bus terminal to temporary bus stations in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.