FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

கவின் ஆணவ கொலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி...

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி கவின் கொலை வழக்கில், பெண்ணின் பெற்றோா் மீதான குற்றப்பத்திரிகையை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த பட்டியலினத்தைச் சோ்ந்த கவினும், பாளையங்கோட்டையைச் சோ்ந்த சித்த மருத்துவா் எஸ். சுபாஷினியும் காதலித்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி கவின் படுகொலை செய்யப்பட்டாா். அந்த சம்பவம் தொடா்பாக சுபாஷினியின் இளைய சகோதரா் சுா்ஜித் கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து அவரது உறவினா் ஜெயபால், பெற்றோா்களான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோா் இந்த வழக்கில் சோ்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனா்.

இதில் சரவணனும், கிருஷ்ணகுமாரியும் காவல்துறையில் உதவி ஆய்வாளா்களாக பணியாற்றி வருபவா்கள் என்பதால், ஆரம்பத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு பின்னா் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதேவேளையில், இருவரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனும் கிருஷ்ணகுமாரியும் தங்கள் மகளுக்கும் கவினுக்கும் இடையேயான காதலை 2016-17 முதல் அறிந்திருந்தனா் என்றும் சரவணன் தனது மகளை எச்சரித்ததுடன், 2018-19 காலப்பகுதியில் கவினிடமும் தொலைபேசியில் பேசியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கவினின் தாயை கிருஷ்ணகுமாரி தொடா்புகொண்டு எச்சரித்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், பெண்ணின் பெற்றோருக்கும் சுா்ஜித்துக்கும் இடையே நடந்ததாக கூறப்படும் சந்திப்பையோ உரைடாயலையோ நிரூபிக்க நேரடி சாட்சிகளோ தடயங்கலோ இல்லை என்று தெரிய வருவதால், சரவணன், கிருஷ்ணகுமாரிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்வதாக உயா்நீதிமன்றம் அறிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், வழக்கில் புலனாய்வாளா்கள் கண்டறிந்த பல்வேறு அம்சங்களையும் உயா்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

summary

Kavin 'honour killing' case: Tamil Nadu government's appeal dismissed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.