FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரஜினியுடன் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? சுந்தர். சி பதில்!

ரஜினி திரைப்படம் குறித்த கேள்விக்கு சுந்தர். சி பதில்...

இயக்குநர் சுந்தர். சி நடிகர் ரஜினிகாந்த்
பகிர்:

இயக்குநர் சுந்தர். சி நடிகர் ரஜினிகாந்த் திரைப்படம் குறித்து பதிலளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை முதலில் இயக்குநர் சுந்தர். சி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விடியோவை வெளியிட்டு அறிவித்ததும் எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகரித்தது.

ஆனால், சில வாரங்களிலேயே அப்படத்திலிருந்து விலகுவதாக சுந்தர். சி அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சுந்தர். சியிடம் கேட்கப்பட்ட போது, “எனக்கும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தும் எந்த வருத்தங்களும் இல்லை. என்னால் என்னுடைய கதைக்களங்களில் மட்டுமே படம் உருவாக்க முடியும். கடந்த 16 ஆண்டுகளாக என் படங்களைப் பார்த்தால் தெரியும். என் படங்களின் கதை மிகச் சாதாரணமாக இருக்கும். அந்த இடத்தில் வேலை செய்யவே பிடித்திருக்கிறது.

ரஜினி சாருடன் இணைந்தால் இயல்பாகவே பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிடும். அந்த எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியுமா என்கிற தயக்கம் இருந்தது. நான் சுலபமாக சமரசம் செய்துவிடுவேன். அதனால், என்னுடைய படமாக அது இருக்குமா என்றும் குழப்பம் ஏற்பட்டது. அதனால், முறையாக நடிகர் ரஜினிகாந்திடமும் தயாரிப்பு நிறுவனத்திடமும் கூறி வெளியேறிவிட்டேன்.” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் - 2 புரமோஷனுக்காக நேர்காணலில் பேசிய சுந்தர். சியிடம், “மீண்டும் நடிகர் ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் இயக்குவீர்களா?” எனக் கேட்கப்பட்டது.

இதற்கு சுந்தர். சி, “இதுகுறித்து நிறைய பேசிவிட்டேன். இருந்தாலும் சொல்கிறேன். இப்போது நேரம் சரியாக அமையாததால் அப்படத்தை இயக்கவில்லை. மீண்டும் அதற்கான சூழல் அமைந்தால் இயக்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Director Sundar C. has responded regarding a potential film with actor Rajinikanth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.