மூக்குத்தி அம்மன் - 2 வெற்றிக்காக கோவிலில் வேண்டிய நயன்தாரா!
கோவிலில் வேண்டுதல் செய்த நயன்தாரா...
நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்திற்காக காளிகாம்பாள் கோவிலில் வேண்டுதல் செய்துள்ளார்.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகைகள் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் வருகிற நவ. 6 ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுந்தர். சி, “மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. படத்தின் பெயர், வேல்ஸ் தயாரிப்பு, நடிகைகள் நயன்தாரா, ஊர்வசி ஆகிய விஷயங்கள் மட்டுமே தொடர்புடையவை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் வேறு எந்தத் திரைப்படங்களுக்கும் இப்படி உழைத்தது இல்லை. அப்படியொரு உழைப்பு.” எனக் கூறியிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் வெற்றி பெற நடிகை நயன்தாரா சென்னையிலுள்ள காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்று வேண்டுதல் வைத்ததுடன் அங்கு சிலருக்கு சேலையையும் பரிசாகக் கொடுத்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.