FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் திரைப்படங்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்கள்...

15 அக்டோபர் 2026, 3:37 pm IST
பகிர்:

இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பண்டிகைகள் என்றாலே ஓய்வு, கொண்டாட்டம் என்கிற மனநிலைகள் ஆக்கிரமித்திருக்கும். அதே நேரம், கொண்டாட்டங்களின் பகுதியாக எப்போதும் திரைப்படங்களைக் காண்பதிலும் தனித்துவமான இடமுண்டு. அதிலும் பொங்கல், தீபாவளி என்றால் அம்மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வரிசைகட்டும். அப்படி, இந்தாண்டும் சில திரைப்படங்கள் தீபாவளி வெளியீட்டைக் குறிவைத்து தயாராகி வருகின்றன.

Advertisement

Advertisement

இந்தப் பட்டியலில் தீபாவளி வெளியீடாக நவ. 5 ஆம் தேதியில் சுந்தர். சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்த மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படமும் நடிகர் விஜய் ஆண்டனியின் அப்பா குட்டியும் திரைக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து, நவ. 6 அன்று நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படம் வெளியாகிறது. இதனை, ஆவேஷம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கியுள்ளார்.

இவை போக, இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான ராமாயணா நவ. 5 அன்று வெளியாகிறது. நிதிஷ் திவாரி இயக்கிய இப்படத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் ஓம் திரைப்படம் தீபாவளி வெளியீட்டைக் குறி வைத்தது. ஆனால், சூர்யாவின் படம் வருவதால் சினிமாவின் ஆரோக்கியத்திற்காக விலகிச் செல்வதாக தனுஷ் அறிவித்திருந்தார். இதனால், இப்படம் நவ. 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

The films set to be released for this year's Diwali have been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments