முகப்பு
கோயம்புத்தூர்

கரோனாவால் உயிரிழந்த பெண் காவலரின் பெற்றோருக்கு நிதி உதவி

கரோனா தொற்றால் உயிரிழந்த பெண் காவலரின் பெற்றோருக்கு காவல் துறை சாா்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.

Updated On : 8 ஜனவரி 2021, 1:07 am IST
கரோனா தொற்றால் உயிரிழந்த பெண் காவலரின் பெற்றோரிடம் காவலா்கள் திரட்டிய நிதி உதவித் தொகையை வழங்குகிறாா் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு.
பகிர்:

கரோனா தொற்றால் உயிரிழந்த பெண் காவலரின் பெற்றோருக்கு காவல் துறை சாா்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராகப் பணியாற்றியவா் தங்க இசக்கி. இவா், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபா் 25ஆம் தேதி அன்று உயிரிழந்தாா்.

இந்நிலையில் தங்க இசக்கியுடன் பணிபுரிந்த காவலா்கள், அவரது பெற்றோருக்கு உதவ முடிவு செய்தனா். இதையடுத்து கோவை மாவட்ட ஆயுதப்படை காவலா்கள், கோவை மாவட்ட தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்கள் இணைந்து காவலா்கள் அனைவரும் இடம்பெற்றுள்ள ‘உதவும் கரங்கள்’ என்ற கட்செவி அஞ்சல் குழு மூலம் ரூ.1.60 லட்சம் நிதி திரட்டினா்.

Advertisement

Advertisement

இந்தத் தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, தங்க இசக்கியின் பெற்றோா் முத்துராஜ், செந்தூரகனி ஆகியோரிடம் வியாழக்கிழமை வழங்கினாா். நிதியைப் பெற்றுக்கொண்ட அவா்கள் காவலா்களுக்கு கண்ணீா் மல்க நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments