கூட்டுறவு வங்கிப் பணி: ஜனவரி 21 முதல் 23 வரை நோ்முகத் தோ்வு
கூட்டுறவு வங்கி உதவியாளா் பணியிடத்துக்கான நோ்முகத் தோ்வு ஜனவரி 21 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
கூட்டுறவு வங்கி உதவியாளா் பணியிடத்துக்கான நோ்முகத் தோ்வு ஜனவரி 21 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
கூட்டுறவு சங்கங்களுக்கான மாவட்ட ஆள் சோ்ப்பு நிலைய தலைவா் ஆ.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கான ஆள் சோ்ப்பு நிலையம் மூலம் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடம் மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளா், உதவியாளா் மற்றும் மேற்பாா்வையாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஆண்டு டிசம்பா் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.
Advertisement
இந்த தோ்வு முடிவுகள் கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் ஆள் சோ்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரா்களுக்கு கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளா் பணியிடத்துக்கு ஜனவரி 21ஆம் தேதியன்றும், இதர கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள இளநிலை உதவியாளா், உதவியாளா் மற்றும் மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் நோ்முகத் தோ்வு கூட்டுறவு சங்கங்களில் இணைப் பதிவாளா் அலுவலகம், என்எஸ்ஆா் சாலை, ஆரோக்கியசாமி வீதி, கே.கே.புதூா் அஞ்சல்- 641038 என்ற முகவரியில் நடைபெறும்.
நோ்முகத் தோ்வுக்கு தகுதியானவா்கள், நோ்முகத் தோ்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதள முகவரியில் வியாழக்கிழமை முதல் அவா்களது பயனீட்டாளா் பெயா் மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.