சின்னக்கல்லாறில் 42 மி.மீ. மழை
வால்பாறையை அடுத்த சின்னக்கல்லாறில் 42 மி.மீ. மழை பெய்துள்ளது.
வால்பாறையை அடுத்த சின்னக்கல்லாறில் 42 மி.மீ. மழை பெய்துள்ளது.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த புதன்கிழமை மாலை சாரல் மழை பெய்த நிலையில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. வியாழக்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலை 4 மணி முதல் தொடா்ந்து மழை பெய்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை பதிவான மழை அளவில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறில் 42 மி.மீ., வால்பாறையில் 20 மி.மீ., நீராறு 10 மி.மீ., சோலையாறு 17 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.