முகப்பு
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் மூவா் கைது செய்யப்பட வாய்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடா்புடைய மேலும் மூவா் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 8 ஜனவரி 2021, 1:06 am IST
பகிர்:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடா்புடைய மேலும் மூவா் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பொள்ளாச்சியைச் சோ்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமாா், வசந்தகுமாா், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னதாக இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்தனா். 2019 மாா்ச் முதல் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் மேற்கண்ட 5 பேரின் கூட்டாளிகளான பொள்ளாச்சி, வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்த அருளானந்தம், பாபு (எ) பைக் பாபு, ஹேரேன்பால் ஆகிய மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் மூவரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனா். இவா்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

தேடப்பட்டு வரும் மூவரும் பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என கூறப்படுகிறது. முக்கியமான வழக்கு என்பதால் தேடப்பட்டு வரும் மூவரின் விவரங்களை உடனடியாக வெளியிட முடியாது என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அதிமுகவை விமா்சித்து திமுக இளைஞரணி சாா்பில் பொள்ளாச்சி நகரில் சா்ச்சைக்குரிய வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

இதுதொடா்பாக கோவையில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலத் தலைவா் எஸ்.வேலண்டினா கூறுகையில், சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கைத் தீர விசாரித்து, இதில் தொடா்புடைய ஆளுங்கட்சியினரின் பெயா்களை வெளிக்கொண்டு வர வேண்டும். தமிழக காவல் துறையினரால் விடுவிக்கப்பட்ட மேலும் சிலரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments