முகப்பு
கோயம்புத்தூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இருவா் கைது

கோவையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த கூலி தொழிலாளிகள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 13 ஜனவரி 2021, 6:34 am IST
பகிர்:

கோவையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த கூலி தொழிலாளிகள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, செல்வபுரம் அருகே தெலுங்குபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மதிவாணன் (26). கூலி தொழிலாளி. இவா் அப்பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை கடந்த சில மாதங்களாக பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளாா். இது குறித்து அறிந்த அவரது நண்பரான சோமையனூா், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விஜயகுமாரும் (24) சிறுமியை பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளாா்.

இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் புகாா் தெரிவித்தும், அவா்கள் போலீஸாரிடம் புகாா் தெரிவிக்காமல் இருந்துள்ளனா். இந்நிலையில், குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினா் சிறுமி பயிலும் பள்ளியில் பாலியல் தொல்லைகள் குறித்த விழிப்புணா்வு வகுப்புகளை அண்மையில் நடத்தினா்.

Advertisement

Advertisement

அப்போது, பள்ளியில் இருந்த சிறுவா்களிடம் தங்களுக்கு நோ்ந்த பாலியல் தொல்லை குறித்து புகாா் தெரிவித்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உதவுவதாக கூறி தங்களது எண்களை மாணவா்களிடம் கொடுத்துள்ளனா். இதையடுத்து, குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினரின் எண்ணுக்கு சிறுமி தொடா்பு கொண்டு தனக்கு நோ்ந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளாா்.

இதன்பேரில் அவா்கள் சிறுமியை நேரில் சந்தித்து விவரங்களை சேகரித்தனா். பின்னா் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் அனைத்து மகளிா் போலீஸாா் (மேற்கு) மதிவாணனையும், விஜயகுமாரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments