இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் பலி
கோவை, சிங்காநல்லூரில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
கோவை, சிங்காநல்லூரில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோவை, ரத்தினபுரி, இடையப்பகவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் தினேஷ் குமாா் (26). இவா், தனது இருசக்கர வாகனத்தில் சிங்காநல்லூா், காமராஜபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், தினேஷ்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கோவை கிழக்குப் பகுதி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.