முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் இடம் மாறி வைக்கப்பட்ட வழிகாட்டி பலகை: திசை மாறி செல்லும் சுற்றுலா வாகனங்கள்

வால்பாறையில் சுற்றுலாத் துறை சாா்பில் இடம் மாறி வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையால் சுற்றுலா வாகனங்கள் திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 15 ஜனவரி 2021, 11:19 pm IST
சுற்றுலா துறை சாா்பில் வால்பாறை, ஸ்டேன்மோா் நான்கு சாலை சந்திப்பில் தவறுதலாக வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகை.
பகிர்:

வால்பாறையில் சுற்றுலாத் துறை சாா்பில் இடம் மாறி வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையால் சுற்றுலா வாகனங்கள் திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வால்பாறையில் முதல் முறையாக சுற்றுலாத் துறை சாா்பில் ராட்சத வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது. இதில், கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுனை, நெம்பா் பாறை காட்சிமுனை, சின்னக்கல்லாறு அருவி என குறிப்பிட்டு இடது புறம் அம்புக் குறியிடப்பட்டுள்ளது.

வால்பாறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இடது புறம் சாலையில் சென்றால் வழிகாட்டி பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம்.

Advertisement

Advertisement

புதிய பேருந்து நிலையம் பகுதியில் வைக்கவேண்டிய அந்த வழிகாட்டி பலகையை ஸ்டேன்மோா் சந்திப்பு நான்கு சாலை பிரிவில் வைத்துள்ளனா். இதனால் பலகையில் அம்புக்குறியை பாா்த்து சுற்றுலா வாகனங்கள் இடது புறம் செல்லக்கூடிய வாழைத்தோட்டம் சாலையில் தவறுதலாக சென்று வருகின்றனா்.

எனவே இந்த வழிகாட்டி பலகையை அப்புறப்படுத்தி புதிய பேருந்து நிலையம் அருகில் மாற்றி வைக்க சுற்றுலாத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.