முகப்பு
கோயம்புத்தூர்

எம்.ஜி.ஆா். பிறந்த நாள்: கோவையில் அதிமுகவினா் மரியாதை

எம்.ஜி.ஆா். பிறந்த நாளை ஒட்டி கோவையில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 17 ஜனவரி, 2021 at 11:07 PM
கோவையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அம்மன் கே.அா்ச்சுணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி மற்றும் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM

எம்.ஜி.ஆா். பிறந்த நாளை ஒட்டி கோவையில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது, கோவை மாநகா் மாவட்டச் செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிா்வாகிகள் பலா் எம்.ஜி.ஆரின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, கட்சி அலுவலகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எம்.ஜி.ஆா். உருவப்படத்தை அவிநாசி சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலை வரை ஊா்வலமாக கொண்டுச் சென்றனா்.

Advertisement

பின்னா் எம்.ஜி.ஆா். சிலைக்கு கோவை மாநகா் மாவட்டச் செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி, ஆவின் தலைவா் கே.பி. ராஜு, மாநகா் மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலாளா் கே.ஆா்.ஜெயராம், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.