முகப்பு
கடலூர்

வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

காட்டுமன்னார்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உழவர் பெருவிழாவில் விவசாயிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வேளாண் அதிகாரிகளை

Updated On : 2 மே 2013, 12:17 pm IST
பகிர்:

காட்டுமன்னார்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உழவர் பெருவிழாவில் விவசாயிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காட்டுமன்னார்கோவில் பிள்ளையார்தாங்கல் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடைத் துறை, கூட்டுறவுத் துறை பங்கேற்ற உழவர் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

Advertisement

Advertisement

இவ்விழாவில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் சரியாக வழங்கப்படவில்லை, அரசு நிவாரணமும் சரியாக வழங்கப்படவில்லை என வலியுறுத்தி, விவசாய சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.

பின்னர் கூட்டத்தில் தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ள மானியத் திட்டங்கள் அவர்களை சென்றடையவில்லை. மானியங்கள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.