முகப்பு
கடலூர்

கோயில் விழாவில் கஞ்சி குடித்த 150 பேருக்கு வாந்தி, பேதி

காட்டுமன்னார்கோயில் அருகே கோயில் விழாவில் கஞ்சி அருந்திய 150 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 11:12 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

காட்டுமன்னார்கோயில் அருகே கோயில் விழாவில் கஞ்சி அருந்திய 150 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.

÷இதனைத்தொடர்ந்து, அக்கிராமத்தில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.

÷காட்டுமன்னார்கோயில், கஞ்சங்கொல்லை கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisement

÷இந்த விழாவில் கஞ்சிக் குடித்த 150 பேருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து மீன்சுருட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 50 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

÷தகவலறிந்த கடலூர் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் ஜவஹர்லால்பாபு, வட்டாட்சியர் வெங்கடாசலம் ஆகியோர் அக்கிராமத்திற்குச் சென்று உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.÷இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் சிவானந்தம் தலைமையில் மருத்துவக்குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.