முகப்பு
கடலூர்

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கடலூரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:10 am IST
பகிர்:

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கடலூரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

÷விநாயகர் சதூர்த்தி விழா, வரும் செப்டம்பர் 9-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

÷இதனை முன்னிட்டு கடலூரில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

÷இதில், கடலூர் முதுநகரில் காகிதக் கூழ் மூலமாக விநாயகர் சிலைகள் செய்யும் பணி, கடந்த ஒரு மாதக்காலமாக நடைபெற்று வருகிறது.

÷இங்கு 3 அடி முதல் 7 அடி உயரம் வரை உள்ள சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

÷விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உருவம் கொடுக்கப்பட்ட சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகளும் துரிதமாக நடைபெறுகிறது.

÷இது குறித்து சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சரவணன் கூறியதாவது:

÷வழக்கமாக ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையில் விநாயகர் சிலை விற்பனை தொடங்கிவிடும். அதன் பிறகு நாளுக்கு நாள் விற்பனை அதிகரிக்கும்.

÷விநாயகர் சதுர்த்துக்கு முதல் நாள் வரை விற்பனை இருக்கும். இந்த ஆண்டில் விற்பனை குறைவாகவே உள்ளது. ரூ.1,000 முதல் ரூ.12,000 வரை விலையுள்ள சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.