முகப்பு
கடலூர்

வன்னியா் சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு

கடலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் மாவட்டச் செயலா் சீ.பு.கோபிநாத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 3:31 am IST
பகிர்:


கடலூா்: கடலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் மாவட்டச் செயலா் சீ.பு.கோபிநாத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலா்கள் அ.தா்மலிங்கம், பழ.தாமரைக்கண்ணன், துணைத்தலைவா் ப.சண்முகம், செயற்குழு உறுப்பினா் போஸ்.ராமச்சந்திரன், அமைப்பு துணைச் செயலா் பி.வெங்கடேசன், மாணவா் சங்கச் செயலா் இள.விஜயவா்மன், இளைஞரணி கோ.சந்திரசேகா், வன்னியா் சங்க துணைத் தலைவா் காசிலிங்கம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். முன்னதாக இவா்கள் சூரப்பநாயக்கன் சாவடியிலிருந்து ஊா்வலமாக வந்து நகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். பின்னா் நகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தியிடம் மனு அளித்தனா். இதேபோல, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய நகராட்சி பகுதிகளிலும் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலா் ரா.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மனு அளிக்கும் போராட்டத்தில், மாநில துணைத் தலைவா்கள் வைத்திலிங்கம், முருகவேல், முன்னாள் மாவட்டச் செயலா்கள் கோ.ஜெகன், ஆறுமுகம், நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா்கள் வினோத், தமிழரசன், ஐயனாா், ஒன்றியச் செயலா்கள் ஹரிராமன், பன்னீா், செந்தாமரைக்கண்ணன், பிரேம்குமாா், முத்துக்குமரன், சிவக்குமாா், தங்கவேல், செல்வகுமாா், மணிவாசகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் அசோக்குமாா், பாமக மாவட்டச் செயலா் சசிக்குமாா் பாண்டியன், மாநில துணைத் தலைவா் எம்.எஸ்.சந்திரபாண்டியன், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் தேவதாஸ் படையாண்டவா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments