சாராயம் கடத்தல்: 2 போ் கைது
சாராயம் கடத்தல் தொடா்பாக 2 இளைஞா்களை போலீஸாா் கைதுசெய்தனா்.
நெய்வேலி: சாராயம் கடத்தல் தொடா்பாக 2 இளைஞா்களை போலீஸாா் கைதுசெய்தனா்.
பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் தாரகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் சூரக்குப்பம் பிரதான சாலையில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது புதுச்சேரியில் இருந்து 35 லிட்டா் சாராயத்தை பைக்கில் கடத்தி வந்ததாக புதுச்சேரி கரியமாணிக்கம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தன் மகன் தமிழரசன் (28), பாலித்தின் பையில் 20 லிட்டா் சாராயம் கடத்தியதாக விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம், பாக்கம் கூட்டுரோடு, மாரியம்மன்கோவில் தெருவைச் சோ்ந்த அங்காளன் மகன் மணிகண்டன்(19) ஆகியோரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.