கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை மேமாத்தூரில் 206 மி.மீ. பதிவு
கடலூா்: கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. மேமாத்தூரில் 206 மி.மீ. மழை பதிவானது.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பகல் மற்றும் இரவில் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது.
மேமாத்தூரில் 206 மி.மீ. மழை: வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக மேமாத்தூரில் 206 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: வேப்பூா் 180, காட்டுமைலூா் 172, பெலாந்துறை 158.4, ஸ்ரீமுஷ்ணம் 108.3, மாவட்ட ஆட்சியரகம் 85.5, புவனகிரி 78, விருத்தாசலம் 77, அண்ணாமலை நகா் 69.2, பரங்கிப்பேட்டை 66.6, குப்பநத்தம் 65.8, சேத்தியாத்தோப்பு 63, லால்பேட்டை 60.8, குடிதாங்கி 59.2, காட்டுமன்னாா்கோவில் 57, சிதம்பரம் 53.6, கொத்தவாச்சேரி 53, குறிஞ்சிப்பாடி 52, லக்கூா், கீழச்செருவாய், வானமாதேவி தலா 47, கடலூா் 41.6, வடக்குத்து 36.5, தொழுதூா் 27, பண்ருட்டி 17 மில்லி மீட்டா் மழை பதிவானது.
Advertisement
Advertisement
ஜனவரியில் அதிக மழை: மாவட்டத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதலான ஒப்பீட்டில் நிகழ் ஜனவரியில் அதிகபட்ச மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக 2004-ஆம் ஆண்டில் சராசரியாக 5.1 மி.மீ. மழை பதிவானது. 2005, 2007, 2016, 2019-ஆம் ஆண்டுகளில் மழையே இல்லாமலும், சில ஆண்டுகளில் 20 முதல் 33 மி.மீ. வரையிலும் சராசரியாக மழை பதிவானது. 2008-ஆம் ஆண்டில் 62.6 மி.மீ, 2018-ஆம் ஆண்டில் 44.3 மி.மீ., 2017-ஆம் ஆண்டில் 106.7 மி.மீ மழை பதிவானது. ஆனால், தற்போதைய ஜனவரியில் இதுவரை சராசரியாக 116.63 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.