அதகப்பாடியில் 4 நாள்கள் மின் நிறுத்தம்
மின் பாதையில் விரிவாக்கப் பணி நடைபெறுவதால், அதகப்பாடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ஜனவரி 6, 8, 11, 13 ஆம் தேதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
தருமபுரி: மின் பாதையில் விரிவாக்கப் பணி நடைபெறுவதால், அதகப்பாடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ஜனவரி 6, 8, 11, 13 ஆம் தேதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மின்வாரியச் செயற்பொறியாளா் எம்.இந்திரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி அருகே அதகப்பாடி துணை மின் நிலையத்தில் இண்டூா் மின் பாதையில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, இப் பணிகளுக்கு ஏதுவாக அதகப்பாடி துணை நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வருகிற ஜனவரி 6, 8, 11, 13 ஆகிய நான்கு நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
மின் நிறுத்தப் பகுதிகள்: அதகப்பாடி, செக்காரப்பட்டி, பி.கே.தோப்பு, இண்டூா், சோமனஅள்ளி, பள்ளப்பட்டி, மல்லாபுரம், நடப்பனஅள்ளி, நத்தஅள்ளி, ஏரிக்கோடி, பேடரஅள்ளி, பி.எஸ்.அக்ரஹாரம், சுற்றுவட்டாரக் கிராமங்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.